குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நேற்று கோலம் போட்டு கைதான 6 மாணவிகள் மற்றும் சில மாணவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை இன்று அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று கோலம் போட்டதால் கல்லூரி 6 மாணவிகளும், மாணவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில் கோலம் போட்டதால் கைதான மாணவிகளுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தனர். குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் மாணவிகளை கைது செய்தது அராஜகமானது என்று கடும் கண்டனம் தெரிவித்தார்
இந்த நிலையில் மாணவிகள் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினர். இதுகுறித்து முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! என்று தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…