டெரர் லுக்கில் அருண் விஜய்!. வணங்கான் புது போஸ்டரோடு டிரெய்லர் தேதியும் சொல்லிட்டாங்க!..

தமிழ் சினிமாவில் டெரர் இயக்குனராக பார்க்கப்படுபவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் வாங்கினார்.

அதன்பின் அவர் இயக்கிய பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை கவரவில்லை. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்கிற பெயரில் சியான் விக்ரம் துருவை வைத்து எடுத்தார் பாலா. ஆனால், அந்த படம் விக்ரம் மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கே பிடிக்கவில்லை.

எனவே, அந்த கதையிலிருந்து பாலாவை தூக்கிவிட்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து அதே கதையை மீண்டும் எடுத்தனர். இது பாலாவுக்கு அவமானமாக அமைந்தது. எனவே, எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்தார் பாலா. ஆனால், அவரின் இயக்கத்தில் நடிக்க யாரும் விரும்பவில்லை.

அப்போதுதான் சூர்யா அவருக்கு கை கொடுத்தார். அப்படி உருவான படம்தான் வணங்கான். படத்தின் போஸ்டரும் வெளியானது. ஆனால், சில நாட்கள் அப்படத்தில் நடித்த சூர்யா அப்படத்திலிருந்து விலகினர். அதன்பின் அருண் விஜயை வைத்து அப்படத்தை எடுத்தார் பாலா. இந்த படத்தில் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவராக அருண் விஜய் நடித்திருக்கிறார்.

படத்தின் டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் கண்டிப்பாக பாலாவுக்கும், அருண் விஜய்க்கும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற திங்கட் கிழமை அதாவது ஜூலை 8ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த செய்தி பாலாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பாலா படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என நினைக்கும் ரசிகர்கள் வணங்கானுக்காக காத்திருக்கிறார்கள்.

Related Articles
Next Story
Share it