அருண் விஜயே இத எதிர்பாக்கலயாம்!… மரண மாஸ் ஹிட் அடித்த ‘பார்டர்’டிரெய்லர் வீடியோ…

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வந்தாலும் தல அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாறிப்போனவர் அருண் விஜய். அப்படம் அருண் விஜயின் திரை வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அவர் இரட்டை வேடங்களில் நடித்த ‘தடம்’ திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது. தமிழில் ஹீரோவாக நடிக்கும் அருண் விஜய் தெலுங்கில் வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார்.

arun vijay

தற்போது ஈரம், மெல்லினம், குற்றம் 23, ஆறாது சினம் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் தீவிரவாதிகளை ஒடுக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில், பரபரக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

arun vijay

இந்நிலையில், இந்த டிரெய்லர் வீடியோவை 16 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

Published by
adminram