மகனை பார்த்து பெருமைப்பட்ட தருணம்… அருண்விஜய் பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படங்கள்…

பல வருடங்களாக சினிமாத்துறையில் இருந்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் அருண்விஜய். மகிழ்திருமேனியின் ‘தடையற தாக்க’ அவரின் சினிமா வாழ்க்கையை மாற்றியது. மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மகிழ் திருமேனின் இயக்கத்தில் அவர் நடித்த ‘தடம்’ படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரின் மகன் அர்ணவ் விஜயும் திரைப்படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் அர்ணவ் நடித்துள்ளார். இது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதையாகும்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது.  

இந்நிலையில், மகன் டப்பிங் பேசும் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண்விஜய் ‘என் குழந்தை பற்றி பெருமை படும் தருணம் இது’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

Published by
adminram