மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் ஆர்யா-சாயிஷா: வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஆர்யா சமீபத்தில் சூர்யாவுடன் நடித்த ’காப்பான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது டெடி, சந்தனத்தேவன் மற்றும் 3தேவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் பிரபல நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்ததால் தேனிலவு கூட செல்லவில்லை. மேலும் இந்த தம்பதிகள் இணைந்து ’டெடி’ என்ற படத்தில் நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது 

இந்த நிலையில் இருவரும் தற்போது படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் தேனிலவை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளனர். மாலத்தீவில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஆர்யாவின் முதுகில் உப்பு மூட்டை போல் சாயிஷா உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ஆர்யா மற்றும் சாயிஷா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சாயிஷா தற்போது யுவரத்னா’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது

Published by
adminram