அட நம்ம லாஸ்லியா முதலில் ஹீரோயினா நடித்ததே அஷ்வினுக்கு ஜோடியா தானாமே!
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதையடுத்து பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி புகழ் அஷ்வினுடன் லாஸ்லியா சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பரவி கவனத்தை ஈர்த்து வருகிறது. அஷ்வின் லாஸ்லியாவுக்கு ஈடாக ஷிவாங்கியுடன் சேர்ந்து கிடுகிடுன்னு பிரபலமாகிவிட்டார்.
இப்படியான ஒரு நிலையில் அஷ்வினை குறித்து தேடும் போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய லாஸ்லியா முதன்முறையாக அஷ்வினுக்கு ஜோடியாக விளம்பர படமொன்றில் நடித்திருப்பது வைரலாக பேசப்பட்டு அந்த வீடியோவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ...