More

அஷ்வினால் ஹர்திக் பாண்டியா போட்ட ஆட்டம்… ஆச்சரியத்தில் விஜய் ரசிகர்கள்

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டி முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் லெக் சைடில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஷ்வின், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெற்றிருக்கும் `ஷோல்டர் டிராப்’ மூவ்மெண்டைப் போட்டு அசத்த சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் கரகோஷத்தால் அதிர்ந்தது. அதுகுறித்த வீடியோவும் செம ட்ரெண்ட் ஆகியது.

இந்நிலையில், அஷ்வின் தனது சக வீரர்களான குல்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை செம குஷியில் ஆழ்த்தி இருக்கிறது. அப்பதிவில் கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் சிலர் விராட் மற்றும் ரோஹித்தையும் இப்பாடலுக்கு நடனம் ஆட சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Published by
adminram

Recent Posts