இசைவெளியீட்டு விழாவில் ஜிவி பிரகாஷை அசிங்கப்படுத்திய தனுஷ்... வந்த பாதையை மறந்துட்டீங்களே பாஸ்..?

by ramya suresh |

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். தற்போது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகின்றார். ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்கின்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய இசை திறமையால் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்தார்.

17 வயதில் வெயில் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தன்னுடைய திறமையை காட்டிய ஜிவி பிரகாஷ் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசதி வந்தார். அதிலும் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு இவர் கொடுத்த இசை இன்றளவும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார்.

இதற்கிடையில் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து அசதி வருகின்றார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் படங்களில் தொடர்ந்து இசையமைப்பாளராக இருந்து வருகின்றார்.

ஜிவி பிரகாஷ் நடிகர் தனுஷின் ஏகப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். இவர் தனுஷ் படங்களில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகச் சிறந்த வரவேற்பை கொடுத்தது. அதிலும் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: "அசுரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல அவமானங்களை சந்தித்தார் ஜிவி பிரகாஷ். படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து அந்த இசை வெளியீட்டு தகடை வெளியிடும் சமயத்தில் படக்குழுவினரை சேர்ந்த அனைவரையும் மேடைக்கு அழைத்தார்கள்.

ஆனால் விழாவின் நாயகனான ஜிவி பிரகாஷை மட்டும் அவர்கள் யாருமே அழைக்கவில்லை. ஏன் தனுஷ் கூட மேடைக்கு அவரை அழைக்கவில்லை. பின்னர் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் ஜிவி பிரகாஷ் நீங்கதான் இந்த நிகழ்ச்சியின் ஹீரோ. நீங்கள் மேடைக்கு செல்லவில்லை என்றால் எப்படி நீங்கள் போங்கள் என்று கூறியவுடன் சிரித்துக்கொண்டே செல்லும்போதுதான் அங்கிருந்தவர்கள் ஜிவி பிரகாஷ் அழைத்தார்கள். பின்னர் அந்த நிகழ்ச்சியின் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வைத்து ஜிவி பிரகாஷுக்கு மிகப்பெரிய அவமானத்தை கொடுத்திருந்தார் தனுஷ்" என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

Next Story