டிராகன் படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?!.. பக்கா ஸ்கெட்ச் போடும் படக்குழு!...

Dragon Movie: லவ் டுடே என்கிற மெகா ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம்தான் டிராகன். 2k கிட்ஸ்களை குறி வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஓ மை கடவுளே படத்தை இயக்கி ஹிட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கல்லூரி மாணவராக பிரதீப் நடித்திருக்கிறார்.
அவருடன் கல்லூரியில் படிக்கும் மாணவியாக அனுபமா பரமேஸ்வரனும், கல்லூரி பேராசிரியராக இயக்குனர் மிஷ்கினும் நடித்திருக்கிறார்கள். கன்னட நடிகை கயடு லோஹரும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, இயக்குனர் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கல்லுரியில் ஒழுங்காக படிக்காமல் அலப்பறை செய்து கொண்டு அரியர்ஸ் வைத்துக்கொண்டு, சக தோழியிடம் ரொமான்ஸ் செய்து கொண்டு ஜாலியாக சுற்றி வருகிறார் பிரதீப். கல்லூரி படிப்புக்கு பின் அவரின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை. இதை கொஞ்சம் சீரியஸாகவும், கொஞ்சம் காமெடியாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் பல காட்சிகள் டான் படத்தை நினைவு படுத்துகிறது என கூறி வருகிறார்கள். இந்த கேள்வியை டிராகன் படத்தின் இயக்குனரிடமே கேட்டதற்கு அவர் அதை மறுத்திருக்கிறார்.
டான் படம் வெளியாகி சில வருடங்கள் ஆகியிருக்கிறது. அதை ஏன் நாங்கள் மீண்டும் எடுக்கபோகிறோம். இது முழுமையாக வேறு கதை என சொல்லியிருக்கிறார். மேலும், என்னுடைய ஓ மை கடவுளே படம் 3 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இப்போது டிராகன் படம் 35 கோடி செலவில் உருவாகியுள்ளது. இந்த படம் உருவானபோது ஒரு காட்சியை கூட நான் சேர்த்து எடுக்கவில்லை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறேன். திரைக்கதையை எழுதும்போதே நான் காட்சிகளை ட்ரிம் செய்து எடுத்திருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.