அடேங்கப்பா….ஒரே படத்தில 72 பாடல்களா…?

Published on: June 3, 2021
---Advertisement---

a7b29f4541ac5d0394c1fd72285911ac

ஒரு படத்திற்கு பாடல்கள் முக்கியம் தான். அது இருந்தால் தான் படம் பார்க்க அழகாக இருக்கும். கொஞ்சம் ரிலாக்ஸாகவும் இருக்கும். அதுக்காக ஒரு படத்தில் இவ்ளோ பாடல்களா இருப்பது..? அதிக பாடல்களைக் கொண்ட படம் என்று பார்த்தோமானால் அது 1934ல் வெளியான ஸ்ரீகிருஷ்ணலீலா தான். இது ஒரு புராண திரைப்படம். இந்த படத்தில் எத்தனை பாடல்கள் என்று தெரியுமா? 60. சி.எஸ்.ஜெயராமன், சி.எஸ்.ரமண்ணா நடித்துள்ள இப்படத்தை பி.வி.ராவ் இயக்கியிருப்பார். 

இந்திய அளவில் அதிக பாடல்களைக் கொண்ட திரைப்படம் இந்திர சபா என்ற இந்தி திரைப்படம். 1932-ல் வெளியான இப்படத்தில் 72 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

பாடல்களே இல்லாத படங்கள்

படத்தில் பாடல்கள் முக்கியம் என்று பார்த்தோம். ஆனால் பாடல்களே இல்லாமல் படம் வந்துள்ளதே… அது என்னென்ன படங்கள் என்று தெரியுமா? அந்தநாள். இதுதான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம். 1954ல் வெளியான முதல் படம் இது. ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த படம். இப்படத்தின் கதை இதுதான். சிவாஜிகணேசனின் கதாபாத்திரம் கதையின் துவக்கத்திலேயே கொலை செய்யப்படுகிறது. மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை சந்தேகப்பட வைக்கிறது. கொன்றவன் யார் என ஜாவர் சீத்தாராமன் துப்பறிவாளராக கண்டுபிடிப்பதே படக்கதை. பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

378b33fe23b8434de816fb9d954c0c8d-4

வண்ணக்கனவுகள், ஏர்போர்ட், பேசும்படம், கைதி, கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு, குருதிப்புனல், டூலெட், விசாரணை, ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வீடு, சந்தியாராகம், அது, அகடம், அக்னிதேவி, ஹவுஸ்புல், ஷாக், உன்னைப்போல் ஒருவன், பயணம், நடுநிசி நாய்கள், துப்பறிவாளன், யூடர்ன், கேம் ஓவர், ஒரு வீடு இருவாசல், வனயுத்தம், குற்றமே தண்டனை, முகம், தலைமுறைகள் ஆகிய படங்களில் மருந்துக்குக்கூட பாடல்கள் இல்லை.

 6a53d949e0cbbaf132f6613f0865875d

எதற்காக இதுபோன்ற படங்களில் பாடல்களே இல்லை என்றால், கதையின் விறுவிறுப்பைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படங்களில் பாடல் இல்லை. சமீபத்தில் வெளியான விஷால் நடித்த சக்ரா திரைப்படத்திலும் பாடல்களே இல்லை.  

2 பாடல்கள் மட்டுமே கொண்ட படம்தான் 1991ல் வெளியான கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் நடித்துள்ள இப்படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. படம் முழுவதும் ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லாமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் படத்தை நகர்த்தியிருப்பார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. 

Leave a Comment