மீண்டும் விஜயுடன் இணையும் இயக்குனர்- இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போவுதோ இந்த சுவர்?!

தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன்மூலம் பத்து ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் பூஜா ஹெக்டே. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay

இதையடுத்து தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘தோழா’ என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் 66 படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தில் விஜய்க்கு சம்பளமாக 100 கோடிக்கு மேல் கொடுக்க உள்ளார்களாம். இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது விஜய் 67 படத்தின் மூலம் மீண்டும் அட்லீயுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

atlee-vijay

இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தவர். இதில் பிகில் படம் விமர்சன ரீதியாக சற்று சறுக்கினாலும் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. மூன்று ஹிட் கொடுத்த கூட்டணி தற்போது நான்காவது முறையாக இணைய உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார். இப்படத்தை முடித்தபின் மீண்டும் விஜய்யுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்க்ளின் நிலைமை என்ன தெரியுமா?

தெறியை பொறுத்தவரை கலைப்புலி தாணு என்பதால் தப்பித்துக் கொண்டார். மெர்சல் படத்தினை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த படத்துடன் அலுவலகத்தையே காலி செய்தனர். இன்று வரை படங்கள எதுவும் தயாரிக்கவில்லை. பிகில் படத்தினை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டது என்று அவர்களே கூறியதாக செய்திகள் வந்தன.காரணம் அட்லியின் ஆடம்பர பட்ஜெட்தான் என்கிறார்கள் சினிமா உலகினர். படம் ஆரம்பிக்கும்போது ஒரு பட்ஜெட்டில் துவங்கி படம் முடியும்போது அது வேறு ஒரு பட்ஜெட்டில் முடியுமாம். இதுதான் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். 

இப்போது எந்த தயாரிப்பாளர் மாட்டபோகிறாரோ என்றும், இந்த சுவர் அடுத்து  இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ eன்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Published by
adminram