செம மாஸா இருக்கே!.. ஷாருக்கான் - அட்லி இணையும் படத்தின் டைட்டில் இதுவா?...

by adminram |

fa44aa8c3c3622bc2ad03e49e62cc459-1-2

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. பிகில் திரைப்படத்திற்கு பின் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கனை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்பு அவரின் முயற்சி வெற்றி பெற்றது. கடந்த 2 வருடங்களாகவே மும்பையில் தங்கியிருந்து இப்பட வேலைகளை அவர் செய்து வந்தார். இப்படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கவுள்ளார்.

57f37c0cb5956b7169aec9881402d240

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். போலீஸ் அதிகாரியாகவும், குற்றவாளியாகவும் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம். மேலும், இப்படத்தில் தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல், நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும், மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் மும்பையில் அதிக செலவில் நடந்தது.

5826adc248fa4632b12d0b50a08ab576

இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் பூனேவில் துவங்கவுள்ளது. இதற்காக நயன்தாராவும் பூனே சென்றுள்ளார். இப்படத்தில் யோகிபாபு மற்றும் நடிகர் கதிரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அட்லி நாடியுள்ளாராம். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்க அட்லி திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது. அதோடு, இப்படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்க அட்லீ யோசித்து வருகிறாராம். ஜவான் என்றால் இளம் இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story