ஷாருக்கானுக்கு சூர்யா பட டைட்டில்.. அட்லீக்கு அவர் மீது என்ன காண்டோ தெரியல!...
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. பிகில் திரைப்படத்திற்கு பின் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கனை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். போலீஸ் அதிகாரியாகவும், குற்றவாளியாகவும் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம். மேலும், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் . மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக நயன்தாராவும் பூனே சென்றுள்ளார். இப்படத்தில் யோகிபாபு, பிரியாமணி, நடிகர் கதிர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் சுனில் க்ரோவர் மற்றும் சானி மல்ஹோத்ரா ஆகிய பாலிவுட் நடிகர்கள் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்க அட்லி திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது. அதோடு, இப்படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்க அட்லீ யோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.
தற்போது இப்படத்திற்கு ‘லயன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புனேவில் உள்ள ஒரு மெட்ரோ ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்த படக்குழு அனுமதி கேட்ட லெட்டர் பேடில் ‘Lion’ என்கிற தலைப்பு இருந்ததாதால் இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. தமிழில் சூர்யா ஏற்கனவே சிங்கம் என்கிற தலைப்பில் நடித்துள்ளார்.அதையே ஷாருக்கான் படத்திற்கு ஆங்கிலத்தில் வைத்துள்ளார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட அட்லீ திட்டமிட்டுள்ளாராம்.