கர்ட்டனை ஆடையாக மாற்றிய ஆத்மிகா… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும்  இளம் நடிகைகள் வரை அனைவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். படங்களிலீ நடிப்பதன் மூலம் பிரபலமாவதைவிட இது போன்று சோசியல் மீடியா மூலம் எளிதில் ரசிகர்களிடம் சென்றடைந்து விடலாம் என்பதே அவர்களின் நோக்கம். 

இந்த வரிசையில் தற்போது பல இளம் நடிகைகள் இணைந்து உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் என்றால் அது நடிகை ஆத்மிகா தான். இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

aathmika

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக கால் தடம் பதித்தவர் தான் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஹீரோவாக அறிமுகமான மீசையமுறுக்கு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் ஆத்மிகா. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இளைஞர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.

அதேபோல் படத்திற்குப் பின்னர் நடிகை ஆத்மிகாவிற்கு சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான ஃபேன் பேஜ் உருவாக்கப்பட்டது. எனவே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மீசைய முறுக்கு படத்திற்குப் பின்னர் இவரை எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. தற்போது வரை பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

aathmika

இவர் நடித்த நரகாசுரன் படமும் சில காரணங்களால் தற்போது வரை வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜன்னலில் தொங்கி இருந்த கர்ட்டைனை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Published by
adminram