More

ஆத்தாடி ஆத்தா… அறந்தாங்கி நிஷாவா இது? ஹீரோயின் சான்ஸ் உங்கள தேடி வந்திடும்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

Advertising
Advertising

நிஷா தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.  கூடவே சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷாவை அனைவருக்கும் பிடிக்கும்.

இவர்களுக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் இருக்கின்றனர். மகள்  சஃபா ரியாஸ் கடந்த வருடம் தான் பிறந்தார். பார்ப்பதற்கு அப்டியே குட்டி நிஷாவை போலவே இருப்பார். சமீபத்தில் கூட நிஷாவின் தாலாட்டு பாடலுக்கு   சஃபா ரியாஸ் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்ப்போது டிவி நிகழ்ச்சி ஒன்றிற்காக மேக்கப் போட்டுகொண்டு ரெடியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். செம கலராக ஸ்லிம்மாக தெரியும் நிஷாவை பார்த்து ரசிகர்கள்… அட அக்கா நீங்களா இது? உங்க அழகுக்கு லாக்டவுன் முடிஞ்சதும் ஹீரோயின் ஆகிடுவீங்க கா என கூறி வஞ்சப்புகழ்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts