இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் வசிக்கும் ஆட்டோ ஒட்டுனர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். திரும்பி வரும் போது போலீசார் அவரை மடக்கியுள்ளனர். தகுந்த ஆவணங்களை காட்டிய பின்பும் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து விட்டனர்.
இந்த தகவலை அவர் டிவிட்டர் மூலம் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளர் அர்ஜூன் சரவணனுக்கு தெரிவித்து, அந்த அபாராத தொகையை ரத்து செய்ய ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இதுபற்றி விசாரித்த அர்ஜூன் சரவணன் அவரது அபாரதத்தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார். அந்த ஓட்டுனர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையாளர் அர்ஜூன் சரவணன் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் நெல்லை மாவட்ட பொதுமக்களிடம் நற்பெயரை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…