அவனியாபுரம், அலங்காநல்லூர்… எல்லா ஏரியாவிலும் நான்தான் ராஜா ! யார் கையிலும் சிக்காத ராவணன் !

இந்த வருடம் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ராவணன் என்ற காளை யார் கையிலும் சிக்காமல் ராஜாவாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

தமிழகதின் பொங்கல் பண்டிகையின் ஒரு அம்சமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக் கட்டு போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முடிந்த நிலையில் ராவணன் என்ற காளை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதா என்பவரது காளையான ராவணன் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வீரர்கள் கையில் சிக்காமல் நேற்று 4 நிமிடங்கள் வரைக் களத்தில் நின்று விளையாடியது. அந்த காளையை நெருங்க வீரர்கள் அஞ்சி ஓடினர். இதையடுத்து இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் கலந்து கொண்ட ராவணனை வீரர்களால் பிடிக்க முடியவில்லை.

இதன் மூலம் இந்த வருட ஜல்லிக்கட்டுகளின் ஹீரோவாக ராவணன் மாறியுள்ளார்.

Published by
adminram