அய்யப்பனும் கோஷியும் மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கும் பவன் கல்யாண் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் பிருத்விராஜும், பிஜு மேனனும் இரு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தை இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழில் சிம்புவும் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாண் ஆர்வமாக இருப்பதாகவும், தன்னுடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…