More
Categories: Uncategorized

ரஜினி எம்.ஜி.ஆருடன் ஸ்டண்ட் காட்சியில் கலக்கிய ஆஸாத் பயில்வான்

எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அவரது ரசிகர்கள் இன்றளவும் அவரது சண்டைக்காட்சிகளுக்காகத்தான் பரவசத்துடன் பார்ப்பார்கள். வடிவேல் நடித்த தவசி பட காமெடி ஒன்றில் எம்.ஜி.ஆரை காப்பாற்றுகிறேன் என சண்டைக்காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் வடிவேலு இந்தா தலைவா பிடிச்சுக்க என வாள் ஒன்றை தூக்கி டிவி முன் போட டிவி உடைந்து விடும். அந்த அளவு அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்துள்ளார்கள்.

Advertising
Advertising

இப்படி எம்.ஜி.ஆர் என்றாலே சண்டைக்காட்சிதான் என்று ரசிகர்கள் அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து ரசித்தார்கள். எம்.ஜி.ஆர் தனக்கு உதவியாளர்களாக இருந்த பாடி பில்டர்கள் ஜஸ்டின், குண்டுமணி போன்றவர்களை படத்தில் சண்டைக்காட்சியில் நடிக்க வைத்துள்ளார்.

பெரிய பாடி பில்டர் ஒருவருடன் எம்.ஜி.ஆர் மோதி ஜெயிக்கும் வகையில் ஒரு சண்டைக்காட்சி இல்லை என்றால் அந்த படம் ரசிகர்களுக்கு நிறைவடையாது என சொல்லலாம்.

அப்படியாக ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கி எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, சங்கே முழங்கு உள்ளிட்ட பல படங்களில்  எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர்தான் முகமது ஆஸாத். இவரது உடலமைப்பு பயில்வான் போல தோற்றம் கொண்டதால் ஆஸாத் பயில்வான் என அந்தக்கால திரை ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இவர் மாப்பிள்ளை அழைப்பு, சங்கே முழங்கு, சொந்தம்,அக்கா, பந்தாட்டம், ஜஸ்டிஸ் விஸ்வநாத், ரஜினி நடித்த கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர் இவர். ஸ்டண்ட் நடிகராக ஸ்டண்ட் பயிற்சியாளராக ஆஸாத் பயில்வான் விளங்கி இருக்கிறார்.

ஜெய்சங்கர், ஹிந்தி நடிகர் ஜிதேந்திரா போன்றோருடனும் இவர் ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த கழுகு படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் வருவார். இரும்பு மனிதன் போல உடையணிந்து ரஜினி செல்லும் பஸ்ஸின் முன் வந்து நிற்பார். எவ்வளவு அடித்தாலும் மலை போல நிற்பார். ரஜினிகாந்தால் அந்த சண்டையில் எதுவுமே செய்ய முடியாது மிகுந்த போராட்டத்திற்கு பிறகே அந்த சண்டைக்காட்சியில் ஆஸாத் பயில்வானுடன் மோதி ரஜினி ஜெயிப்பார். இவரின் கழுகு பட சண்டைக்காட்சியை பலரும் மறந்திருக்க மாட்டர் என சொல்லலாம்.

இவரை பற்றி கூறப்படும் சுவாரசியமான தகவல்

இவரை ஈராக் நாட்டிற்கு வேலைக்காக அழைத்து சென்றார்களாம் அங்கு சூப்பர் வைஸராக பணிபுரிந்த இவர்  1983-இல் ஈரான் – ஈராக் போர் மூண்டபோது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்டும் ஈராக்கிலிருக்கிலிருந்து உடன் தமிழகத்திற்குத் திரும்பி வந்திருக்கிறார். மீண்டும் அவருக்குத் தெரிந்த சினிமாத் தொழிலிலேயே ஈடுபட்டாராம் இப்போ என்ன ஆனார்னு தெரியல இந்தியில் பிரபல வில்லன் நடிகர் ‘ஷோலே’ புகழ் அம்ஜத்கான் இவரது நண்பராம்.

தற்போது சினிமாவில் இவரை பற்றிய தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை.

Published by
adminram

Recent Posts