மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவருக்கு வயது 19. அதற்கு முன்பே விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் தமிழ், ஹிந்தி என அவரின் அதிரடி இசையில் இசையுலகமே அதிர்ந்தது. இசைப்புயல் என அவருக்கு பட்டமும் வழங்கப்பட்டது. பாலிவுட் தயாரிப்பாளர்கள் கூட அவரின் இசைக்காக காத்திருக்கின்றனர். பாலிவுட் மட்டுமில்லாமல் சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, அவரிடம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘ அவர் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் யாரென்றே எனக்கு தெரியாது. பாரதரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம். எந்தவொரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது’ என அவர் பேசியுள்ளார்.
பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கு திரையுலகினர் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…