More

தூசு தட்டப்படும் பாலாவின் வர்மா… வலைவிரித்த முன்னணி ஓடிடி நிறுவனம்!

பாலா இயக்கத்தில் உருவான வர்மா இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அதை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

பாலா தன் நண்பன் விக்ரம்முக்கு முதல்முறையாக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை இயக்க ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பும் தொடங்கிய வேகத்தில் சீக்கிரமாக முடிந்தது. ஆனால் பாலா எடுத்த மொத்த காட்சிகளையும் எடிட் செய்து போட்டு பார்த்த யாருக்குமே திருப்தி இல்லை. மொத்த படமும் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டு வேறு ஒரு இயக்குனரால் எடுக்கப்பட்டது பாலாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது.

ஆனால் மறுபடியும் எடுத்த ஆதித்ய வர்மாவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மாவை அமேசான் நிறுவனம் வாங்கி ஆயுதபூஜை அன்று ரிலிஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது சம்மந்தமாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Published by
adminram

Recent Posts