
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால் மச்சினிச்சியின் ஆபாச வீடியோவை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்குத் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் அதிகமாக குடிக்கும் பழக்கம் கொண்ட தினேஷ் தன் மனைவியிடமும் அவரது உறவினர்களிடமும் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி தன் தாய் வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் தனது மனைவிக்குப் போன் வீட்டுக்கு வர சொல்லி மிரட்டியுள்ளார். அப்படி வராவிட்டால் ’உன் தங்கையின் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். அவர் சொன்னதோடு நிற்காமல் மனைவியின் உறவினர்கள் இருவருக்கு வாட்ஸ் ஆப்பில் மச்சினிச்சி குளிக்கும் வீடியோவை அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த குடும்பத்தார் காவல்துறையில் புகார் கொடுக்க, தினேஷை கைது செய்துள்ளனர் போலிஸார்.
அவரிடம் நடத்திய விசாராணையில் மச்சினிச்சி தன்னுடைய மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வந்த போது மறைமுகமாக இந்த வீடியோவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.