பந்துவீச்சாளர்களுக்கு ப்ரி பால் என்ற புதுமுறை கொண்டுவரப்படவேண்டும் என பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அஸ்வின் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியது இப்போது வரை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாட உள்ள நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் மன்கட் முறையில் அவுட் ஆக்க வேண்டாம் என நான் அஸ்வினிடம் விவாதிக்க உள்ளேன். அவரிடம் முதல் விஷயமாக இதைதான் பேசப்போகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை அஸ்வின் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாண்டிங் குறித்து பேசிய அஸ்வின் ’பாண்டிங்கிடம் இதுகுறித்து தொலைபேசியில் பேசினேன். அவர் துபாய் வந்ததும் இதுகுறித்து விவாதித்து பேச உள்ளேன். இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு ப்ரீபால் இருப்பது போல, பவுலர்களுக்கு ப்ரீஹிட் கொடுக்கவேண்டும். பந்துவீசுவதற்கு முன்னர் நான் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரிஸை தாண்டினால் 5 ரன்கள் குறைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…