வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ் தான் ஏன் ஹெல்மெட் அணிந்ததில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான விவியன் ரிச்சர்ட்ஸ் 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி உலகக்கோப்பையை வென்றபோது முக்கிய வீரராக திகழ்ந்தவர். கிரிக்கெட் உலகில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
தான் வாழ்நாள் முழுவதும் எவ்வளவும் அபாயகரமான பவுலர்களை எதிர்கொண்டிருந்தாலும் ஹெல்மெட் அணியாமல்தான் இவர் பேட் செய்தார். இத்தனைக்கும் இவர் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் ஹெல்மெட் அறிமுகமாகி பல்வேறு வீரர்கள் அணியத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இப்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிச்சர்ட்ஸ் ‘நான் கிரிக்கெட்டை ஒரு பேஷனாக பார்க்கவில்லை. அதில் நான் விரும்பும் பேட்டிங்கை செய்யும் போது இறந்தால் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு அதில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அப்படி நான் இறந்திருந்தால் அதைவிட பாக்கியம் எதுவும் இல்லை. ஒரு கார் ரேஸில் ஈடுபடும் வீரரை விடவா இதில் ஆபத்து அதிகம் உள்ளது. ’ எனக் கூறியுள்ளார்.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…