3-வது குழந்தைன்னு குஷியிலிருந்த அஜித்.. ஆனா டாக்டர் சொன்னது!... அப்ப ஷாலினிக்கு நடந்தது இதுதானா..?
தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். டாப் ஹீரோவாக இருக்கும் அஜித் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்திருக்கின்றார். அமராவதி என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது 63 வது திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர் கடைசியாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை இவரின் அடுத்த திரைப்படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. லைக்கா நிறுவன தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் முடிவடைந்தது. இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு தான் பல மாத காலம் ஆகிவிட்டது.
எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் மற்றொரு படத்திற்கு அஜித் கமிட்டாவார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதி அஜித் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து விட்டார். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் செட்டில் கூட முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது.
நடிகர் அஜித்தின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். சமீபத்தில் ஷாலினிக்கு வயிற்றில் சிறு பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அசர்பைஜானில் ஷூட்டிங்கில் இருந்த அஜித் சென்னை வந்து ஆப்ரேஷன் செய்த மனைவியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் நடிகை ஷாலினி மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக எண்ணி குஷியில் இருந்தார் அஜித். அதன் பிறகு மருத்துவரை அணுகிய போதுதான் அது கரு அல்ல, கட்டி என தெரியவந்துள்ளது. இதனால் அஜித் மிகுந்த வருத்தம் அடைந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.