தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். என்னதான் இவருக்கு ரசிகர் மன்றம் இல்லை என்றாலும் இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இவரின் திரைப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள்.
கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த இரண்டு வருடங்களாக இவர் நடிப்பில் ஒரு திரைப்படமும் கூட வெளியாகவில்லை. அதற்கு காரணம் லைக்கா நிறுவனம்தான். லைக்கா தயாரிப்பில் இவர் கமிட்டான விடாமுயற்சி திரைப்படம் தான் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. பல பிரச்சினைகளுக்கு நடுவில் இந்த படம் சமீபத்தில் தான் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இப்படத்தின் வெளியிட்டு தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் ஒருவழியாக முடிந்து விட்டது என்று பலரும் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிகர் அஜித் குறித்து பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் அஜித். சினிமாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய ஒரு நடிகர். ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால் போதும் உடனே தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விடுவார், அங்கு அவர்களுடன் நேரம் செலவிடுவது அஜித்துக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு பைக் ரேஸ் மிகவும் பிடிக்கும் இந்த உலகத்தில் உள்ள 80 சதவீதம் இடங்களை பைகிலேயே சுற்றி பார்த்து விட்டார். மிக காஸ்ட்லியான பைக்குகள் எல்லாம் இவரிடம் இருக்கின்றது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அஜித் சில விஷயங்களை கூறியிருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட 3 முறை ஆக்சிடென்ட் நடைபெற்று ஆபரேஷன் நடந்துள்ளது.
அந்த பேட்டியில் பேசிய அவர் கையை காட்டி இதில் என்ன இருக்கிறது தெரியுமா? என்று கேட்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் எல்லாம் முழித்தார்கள். கையை திறந்தவுடன் கை நிறைய மாத்திரைகள் இருந்தது. இவ்வளவு மாத்திரைகளை நான் தினமும் சாப்பிட்டு வருகிறேன். அப்படி என்றால் எனக்கு எவ்வளவு வலி இருக்கின்றது என எண்ணி பாருங்கள் என்று அந்த பேட்டியில் மிகவும் வருத்தப்பட்டு பேசி இருந்தார்” என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கின்றார்.





