பார்த்திபனுக்கு 10 காதலிங்க இருக்காங்க... சீதாவை கடத்திக் கொண்டு போய்... சினிமா பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் பார்த்திபன். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அதன் பிறகு புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சீதாவை தன் படத்தில் ஹீரோயினியாக மாற்றிய பார்த்திபன் பின்னர் அவரை ரியல் லைஃப்லையும் மனைவியாக மாற்றிக் கொண்டார். பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை பெற்றெடுத்தனர்.
பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு பார்த்திபன் வேறொரு திருமணம் செய்யவில்லை. ஆனால் நடிகை சீதா பிரபல சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட சீதா தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றார்.
பார்த்திபனின் காதல்தான் சீதாவை அவரிடம் இருந்து பிரித்து விட்டது என்று கூறி பகீர் கிளப்பி இருக்கின்றார் ரங்கநாதன். இது குறித்து பேசி அவர் தெரிவித்திருந்ததாவது "சீதாவை பிரிந்த பிறகு பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். முதலில் சீதாவிடம் தனது காதலை கூறியிருக்கின்றார் பார்த்திபன். அதற்கு சீதாவும் சம்மதிக்க ஆனால் சீதா வீட்டில் இதற்கு சம்மதம் வழங்கவில்லை.
இருப்பினும் பார்த்திபன் தான் முக்கியம் என்று கூறி சீதா விடாப்பிடியாக இருந்த காரணத்தினால் அவரை கடத்திக் கொண்டு போய் தாலி கட்டி விட்டார் பார்த்திபன். சீதாவை பிரிந்த பிறகு பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். அவர்களை திருமணம் செய்ய முடியாது என கூறிவிட்டார்
அதில் சில பெண்கள் எங்கள் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று கூறி பார்த்திபனை கழட்டி விட்டு சென்று விட்டார்கள். இப்படி பத்து பெண்களிடம் பார்த்திபன் காதல் லீலைகளை செய்திருக்கின்றார். இந்த வயதில் கூட பார்த்திபன் காதலித்து வருகின்றார்" என பல சர்ச்சையான விஷயங்களை கூறி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.