பிரசாந்த் கல்யாணத்துக்கு ஜெயலலிதா வராததற்கு இதுதான் காரணமாம்.... பயில்வான் போட்ட குண்டு
நடிகர் பிரசாந்த் தற்போது விஜய் உடன் இணைந்து கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த அந்தகன் படம் ஆகஸ்டு மாதத்தில் திரைக்கு வருகிறது. இவர் நடிக்க வந்த புதிதில் இளம்பெண்களுக்கு சாக்லெட் பாயாக இருந்தார். தற்போது இவரைப் பற்றி பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
பிரசாந்தோட அப்பா தியாகராஜன். நடிகை ஜெயந்தியோட உறவினரைத் தான் கல்யாணம் பண்ணியிருக்கிறார். அவரோட நெருங்கிய சொந்தம் விக்ரமின் அப்பா. ஆனால் இருவருக்கும் உறவு கிடையாது. பாலுமகேந்திராவிடம் தியாகராஜன் எனக்கு டான்ஸ்லாம் வராதுன்னு சொல்லியே நடித்தாராம். அவர் மிகப்பெரிய நடிகர்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா வெற்றிப்படங்களில் நடித்தார்.
Also Read: எனக்கு சாப்பாட்டை விட பெட்ரூம் மேட்டர்தான் முக்கியம்!. சமந்தா சொன்ன வைரல் வீடியோ!..
தியாகராஜன் மிகப்பெரிய நடிகர் இல்லேன்னாலும் கூட பாலுமகேந்திரா, பாரதிராஜா என பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவுக்கு ஜோடியாக நடித்தார் தியாகராஜன். பிரசாந்துக்கு முதல் படமே வெற்றிப்படம். பிரசாந்த் வந்து அரவிந்த்சாமி மாதிரி. அப்போ உள்ள இளம்பெண்களுக்கு அவர் தான் பெரிய ஹீரோ. உலக அழகி ஐஸ்வர்யாராய் கூட இரு வேடத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அதுவும் ஷங்கர் இயக்கம். அதுல நல்ல சம்பாதிச்சாரு. அப்புறம் நட்சத்திர விழான்னு உலகம் முழுவதும் நடிகைகளைக் கொண்டு போய் நிறைய சம்பாதிச்சாரு.
முதல்ல பிரசாந்தோட கல்யாணத்துக்கு ஜெயலலிதா வர்றதா இருந்துச்சு. ஆனா அவங்க முன்னாடியே சில விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டாங்க. பிரசாந்தோட மனைவி பேரு கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா தியாகராஜனும், பிரசாந்தும் அது தெரிலங்கறாங்க. ஆனா சிஎம் ஜெயலலிதா தெரிஞ்சிக்கிட்டாங்க. அழைப்பு கொடுக்கும்போது வர்றேன்னு சொன்னாங்களாம். ஆனால் கல்யாணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் வரவில்லை என்பது தெரிந்து விட்டதாம்.
அந்தப் பொண்ணும் நல்ல பெரிய இடம் தான். ஆனா என்ன ஒரு வருத்தம்னா டைவர்ஸ்சுக்கு நாலஞ்சு வருஷமாச்சு. இப்போ பார்த்தா பிரசாந்த் விரிஞ்ச மாதிரி இருக்காரு. வில்லனுக்குத் தான் உடம்பு பிட்டா இருக்கும். தியாகராஜன் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் என மூவரிடமும் நல்ல நட்புடன் இருந்தார். தற்போது ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது வரவேற்கக்கூடிய விஷயம்.
Also Read:16 வயதில் தனுஷ் மனதில் பதிந்த பாடம்... வேட்டையனை வீழ்த்த நினைத்தாரா சுள்ளான்?
பிரசாந்தோட புதுப்படம் மினிமம் கியாரண்டியோட ஓடுச்சுன்னா அடுத்த ரவுண்டு வருவார். சினிமாவுல நடிக்கலன்னா கூட அவரைப் பத்திப் பேசுறோம். அதான் அவரோட பிளஸ் பாயிண்ட். மோகன் ஹரா படத்துல கம்பேக் கொடுத்துருக்காரு. ராமராஜனோடு ஒப்பிடும்போது மோகன் தப்பிச்சிட்டாரு. அதே மாதிரி பிரசாந்துக்கும் கம்பேக் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.