மகள் திருமணத்திற்கு வராத சரத்குமாரின் முதல் மனைவி... சீக்ரெட் சொன்ன பயில்வான்!

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 16:22:40  )
varalakshmi
X

சரத்குமார் மகள் வரலட்சுமியின் திருமணம் சமீபத்தில் தாய்லாந்தில் தடபுடலாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு வரலட்சுமியின் அம்மா சாயாதேவி வரவில்லையாம். இதுகுறித்து பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தரும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போமா...

வரலட்சுமி மும்பை தொழில் அதிபர் கோடீஸ்வரர் நிக்கோலஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. சரத்குமார் சம்மதிக்கவில்லை என்றாலும் நிக்கோலஸை வரலட்சுமி திருமணம் செய்து இருப்பார். தாய்லாந்தில் திருமணம் செய்ய ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு. மும்பையில் ஏன் திருமணம் வைக்கவில்லை என தெரியவில்லை. சென்னையில் தாஜ் கோரமண்டலில் திருமணம் நடந்தது. ராதிகாவை திருமணம் செய்த போது வரலட்சுமி அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்தார் சரத்குமார்.

சாயாதேவியுடன் சரத்குமார் வாழ்ந்து வந்தார். வரலட்சுமி தன் அப்பாவுக்குப் போட்டியாகத் தான் சினிமாவில் நடிக்க வந்தார். நடிக்கத் தொடங்கிய முதல் படம் போடா போடி. சிம்புவுடன் காதல் கிசுகிசு வந்தது. அப்புறம் விஷாலைக் காதலித்தார். அதுவும் பிரேக் அப் ஆனது. அவரது திருமணத்திற்கு சாயாதேவி வரவில்லை. சாயாதேவியும் ராதிகாவை ஏற்றுக்கொள்ளவில்லை. வரலட்சுமியும் ராதிகாவை அம்மா என ஏற்றுக்கொள்ளவில்லை.

பத்திரிகையாளரிடமே நான் ராதிகாவை ஆன்ட்டின்னு தான் சொல்வேன் என்றார் வரலட்சுமி. திருமண சம்பந்தமான எந்த புகைப்படத்திலும் சாயாதேவியைப் பார்க்க முடியவில்லை. நிக்கோலஸ் ஏற்கனவே விவாகரத்தானவர். 18 வயதில் அவருக்கு மகள் உள்ளார். மாமனாரும், மருமகனும் பாடி பில்டர்ஸ் தான். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி நடிக்கலாம் என பச்சைக்கொடி காட்டிவிட்டாராம் நிக்கோலஸ். சினிமாவிலும் வரலட்சுமிக்கு எதிர்பார்த்த வேடம் கிடைக்காது. அக்கா, அண்ணி மாதிரின்னா நடிக்கலாம். ஏன்னா அவர் முத்தின கத்திரிக்காய்.

இந்தக் கல்யாணத்துக்கு நடிகர், நடிகைகள் வந்தது குறைவு தான். அழைப்பிதழும் குறைவாகத் தான் கொடுத்தார்களாம். வரலட்சுமியின் அம்மா திருமணத்திற்கு வராதது அதிர்ச்சி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story