பீஸ்ட் பட போஸ்டர் ஒரு ஹாலிவுட் பட காப்பியா?.. அதுக்குள்ள கிளம்பிட்டாய்ங்க!…

Published on: June 22, 2021
---Advertisement---

3598233b69a8d44b05b1e070d586b255

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் 65வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்  போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பீஸ்ட் (Beast) என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

5a7eeae3d37dfd86a8efd5f2c6c465f6

அதேநேரம், பீஸ்ட் பட போஸ்டர் எந்த ஆங்கில படத்தின் காப்பி என சிலர் தேட துவங்கியுள்ளனர். சிலர் சில ஆங்கில பட போஸ்டரோடு பீஸ்ட் பட போஸ்டரை ஒப்பிட்டு இது இந்த பட காப்பி என பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் கையில் துப்பாக்கியுடன் நிற்பதை பார்க்கும் போதே ‘பீஸ்ட்’ திரைப்படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் கதை என்பது நமக்கு தெரிகிறது. ஹாலிவுட்டில் பெரும்பாலும் கதாநாயகர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கும் போஸ்டர்கள் மிகவும் சகஜம். எனவே இதை காப்பி என கூற முடியாது என ஒருபக்கம் சிலர் கூறி வருகின்றனர்.

Leave a Comment