மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
விஜய் பனியன் அணிந்து கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படமும், கையில் துப்பாக்கி, வாயில் குண்டு என ஒரு போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் பகிர்ந்த் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். அதேபோல், அவர் பகிர்ந்த செகண்ட லுக் போஸ்டரை 2 லட்சத்து 37 ஆயிரம் லைக் செய்துள்ளனர். 96 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டரை முந்தி சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் போஸ்டர் வெளியாகி 15 நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்கை பெற்றது. ஆனால், பீஸ்ட் பட போஸ்டர் 13 நிமிடங்களிலேயே ஒரு லட்சம் லைக்கை பெற்று சாதனை படைத்துள்ளது.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…