மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. விஜய் பனியன் அணிந்து கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படமும், கையில் துப்பாக்கி, வாயில் குண்டு என ஒரு போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியது. கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் செப்டம்பார் மாதம் படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம் என விஜய் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும், அதிகபட்சம் 100 பேர் பங்குபெற்று சினிமா படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. எனவே, படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல நடைபெற துவங்கியுள்ளது
இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் பீஸ்ட் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பயந்து நடிகர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், விஜய் துணிச்சலாக படப்பிடிப்பிற்கு தயாராவது சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் பயமின்றி படப்பிடிப்பில் கலந்து கொள்ள துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…