ஜெட் வேகத்தில் விஜய்!.. பீஸ்ட் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?...

by adminram |

fa2cb42e4936c38893d0e7d4844066b1

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் - பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அங்கு பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. எனவே, விரைவில் படக்குழு ரஷ்யா பறக்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 மாதங்களிலில் முடிந்து விடும் எனவும், அடுத்த 3 மாதங்கள் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று, 2022 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட வேண்டும் என படக்குழு வேகமாக இயங்கி வருகிறதாம்

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story