More

இன்னும் சற்று நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 91 ஆயிரம் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 2.30 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை பிரித்து அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்படும் என்பதால் முதல்கட்ட முடிவு காலை 9 மணிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. வாக்குச்சீட்டுக்கள் முறையில் தேர்தல் நடந்துள்ளதால் இதன் முடிவுகள் தெரிய இரவு 8 மணி ஆகும் என தெரிகிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Published by
adminram

Recent Posts