More

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரானா  – பீலா ராஜேஷ் பேட்டி

இந்தியாவில் கொரோனா தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300ஐ தாண்டியுள்ளது. 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக இருந்தது. இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்குப் பின்னர் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம்\ கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 621 லிருந்து  690ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 19 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 39 பேருக்கு சென்னையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts