ஆஸ்கர் விருதை தட்டி சென்ற ‘டெனட்’ - எந்த பிரிவுக்கு தெரியுமா?

by adminram |

98ccdf676a3b8a5e90f4388854a172c6-2

ஹாலிவுட்டில் வித்தியாசமான கதையை கையில் எடுத்து, வித்தியாசமான கோணத்தில் சொல்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் திரைப்படங்களுக்கென்ற உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெனட்(TENET). இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் மகன் ஜான் டேவிட் வாஷிங்டன் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்திற்கு 2021ம் வருடத்திற்காக சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘நோமெட்லேண்ட்’ திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை இயக்கிய சீனப் பெண் இயக்குனர் ‘க்ளோயி சாவ்’ சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார்.

Next Story