சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்து அப்படியே அரசியலில் நுழைந்து மக்களின் ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டபின் திமுகவால் வெற்றியே பெறமுடியவில்லை. மருத்துவமனையில் இருக்கும்போதும் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்.
இறக்கும்போதும் தமிழகத்தின் முதலமைச்சராகவே அவர் இருந்தார். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். சத்தியராஜெல்லாம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜும் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர்களில் ஒருவர்தான்.
பாக்கியராஜின் சில படங்களை பார்த்து பாராட்டியவர்தான் எம்.ஜி.ஆர். அதுவும் தூரல் நின்னு போச்சி படத்தை பார்த்துவிட்டு ‘இது நான் நடிக்க வேண்டிய படம்’ என்று கூட சொன்னதாக ஒரு செய்தி உண்டு. பாக்கியராஜும் எம்.ஜி.ஆரின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். அதனால்தான் ‘பாக்கியராஜ் என்னுடைய கலை வாரிசு’ என ஒருமுறை சொன்னார் எம்.ஜி.ஆர்.
80களில் பாக்கியராஜின் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம் இருந்தனர். அதோடு, எம்.ஜி.ஆருடனும் நெருங்கி பழகியதால் பாக்கியராஜுக்கும் ஒரு கட்டத்தில் அரசியல் மீது ஆசை வந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அவர் தனிக்கட்சியும் துவங்கினார்.
ஆனால், தேர்தலில் அவருக்கும் யாரும் ஓட்டு போடவில்லை. அதனால், அவரின் அரசியல் ஆசை அஸ்தமனமானது. இந்நிலையில், பாக்கியராஜிடம் பல படங்களில் வேலை செய்த இயக்குனர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்.ஜி.ஆர் சீரியஸான நிலையில் அமெரிக்காவில் இருந்தபோது பாக்கியராஜும், நாங்களும் அமெரிக்கா போனோம்.’
அவர் பிழைக்கமாட்டார் என மருத்துவர்கள் சொன்னதால் பாக்கியராஜின் உடன் இருந்தவர்கள் ‘நீங்கள் அரசியலில் இறங்குங்கள். நீங்கள்தான் முதலமைச்சர்’ என சொல்ல அவருக்கும் ஆசை வந்துவிட்டது. எனக்கோ அது முட்டாள்தனமாக தோன்றியது. ‘எம்.ஜி.ஆர் 40 வருடம் போராடி மேலே வந்தார்’ என்றேன். ‘இப்போது அதெல்லாம் தேவையில்லை’ என சொன்னார்கள். அதோடு, யார் யாருக்கு என்னென்ன துறை என்று கூட முடிவு செய்துவிட்டார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது’ என ஜி.எம்.குமார் சொல்லி இருந்தார்.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…