தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பின் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அசுரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அவரின் 43வது திரைப்படம் என்பதால் D43 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பின் செல்வராகவன் இயக்கத்திலும். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தனுஷின் D44 படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…