பிரியாணிக் கடை ஓனரை வைத்து படம் எடுக்க இருந்த பாரதிராஜா – ஜஸ்ட் மிஸ்ஸான வாய்ப்பு!

சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனை வைத்து கடந்த காலத்தில் படம் இயக்க இருந்தாராம் பாரதிராஜா.

பாரதிராஜா படத்துல கல்லு கூட நடிக்குமேய்யா என்று சொல்லுமளவுக்கு யாரக இருந்தாலும் நடிப்பை வாங்கிவிடுவார் பாரதிராஜா. பாலச்சந்தருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக நடிகர்களை அறிமுகப்படுத்தியது என்றால் அது பாரதிராஜாதான். இந்நிலையில் அப்படி ஒருவராக வரவேண்டியர் அந்த வாப்ய்ப்பை இழந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை தமிழகத்தின் உணவுப் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் உரிமையாளர்தான்.

அவரை வைத்து பாரதிராஜா ஒரு படம் இயக்க இருந்ததாகவும் ஆனால் சில பல காரணங்களால் அது கைவிட்டுப் போயுள்ளது. இது சம்மந்தமாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள தமிழ்ச்செல்வன் வரும் காலத்தில் அந்த வாய்ப்பு நிறைவேறும் என்ற ஆசையோடு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram