சிம்புவுடன் இணையும் பாரதிராஜா மகன்

Published on: February 4, 2020
---Advertisement---

480328632f783e9b61a805cd9171257f

சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தடைகளை தாண்டி இந்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள புதிய நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருப்பதாகவும் முக்கிய வேடத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதுவரவாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மற்றும் பிக்பாஸ் புகழ் டேனியல் ஆகியோர் இணைந்துள்ளனர். பாரதிராஜா மற்றும் அவரது மகன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Comment