ஜிவி பிரகாஷ் தங்கை மாதிரி நடந்துக்கோங்க... இல்லனா ஊர் உலகம் தப்பா பேசும்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ துணைக்கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே மெல்ல மெல்ல பரீட்சியமாகி வருகிறார்.
இவர் பெ.விருமாண்டி இயக்கத்தில் வெளியான 'க/பெ. ரணசிங்கம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்ததை அடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அழகழகான போட்டோ ஷூட் நடத்தி தினம் தினம் இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வரும் பவானி ஸ்ரீ தற்ப்போது கிளாமர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒரு விதமான நெருடலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஜிவியின் பெயரை கெடுத்துடாதீங்க ஹோம்லி லுக்கில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திடாமல் நிஜத்திலும் அப்படி இருந்தால் நல்லா இருக்கும் என அன்புக்கட்டளை விடுத்துள்ளனர்.