சமந்தாவுக்கு எதிராக ஜூவாலா கட்டா… ஆதரவாக களமிறங்கும் சின்மயி கணவர்…
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் கொடிக்கட்டி பறந்த நேரத்தில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இரு மத முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து நடிகை சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் சமந்தா. புஷ்பா படத்தில் ஒற்றை பாடலுக்கு ஆடிய நடனமும், ஃபேமிலி மேன் சீரிஸில் இவர் நடிப்புமே குடும்பத்தில் பிரச்னையை கசியவிட்டது.
இதையடுத்து, சில வருடம் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. பின்னர் நடிகை சமந்தா மியோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சையில் இருந்தவர். சினிமாவில் தன்னுடைய இடத்தினை இழந்தார். இப்படி சினிமா கேரியர் ஒரு பக்கம் தொய்வை சந்தித்து வரும் நிலையில், அவர் சொந்த வாழ்க்கையிலும் பிரச்னை உருவாகி இருக்கிறது.
இன்ஸ்டா விரும்பியான சமந்தா அடிக்கடி எதுவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பொதுவான மருந்தை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, மாற்று மருத்துவத்தினை முயற்சித்து பாருங்கள் எனக் குறிப்பிட்டு ஹைட்ரஜன் பெராக்சைடுடன் சூடு நீரில் நெபுலைஸ் செய்யும் புகைப்படத்தினையும் வெளியிட்டு இருப்பார்.
இது சமூகவலைத்தளத்தில் பெரிய சிக்கலை சமந்தாவிற்கு உருவாக்கியது. மருத்துவர்கள் பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். சமந்தாவை ஜெயிலில் போட வேண்டும் எனவும் புகார் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணுவிஷாலின் மனைவி ஜூவாலா கட்டாவும் சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமந்தா சொல்வது சரியான விஷயமே இல்லை. அவரை யாரும் பாலோ செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி சரியான மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் இதற்கு எதிராக பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்தரா, ஒரு மருத்துவரின் மருந்து குறிப்புக்கு இன்னொரு மருத்துவர் மறுப்பு தெரிவிப்பது இன்னும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது சமந்தாவுக்கு மட்டும் இத்தனை வெறுப்பை தெளிப்பது ஏன் என ஆதரவாக பேசி இருக்கிறார்.
நடிகர் ராகுல் ரவீந்தரும், சமந்தாவும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு நடிகை சமந்தா விளக்கம் அளித்திருக்கும் நிலையில், இன்னும் இந்த பிரச்னை அமைதியாகாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.