More

ஆரவ்விற்கு திருணம் முடிந்தது – ஒன்று கூடி வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஆரவிடம் காதல் வசப்பட்டிருப்பதாக ஓவியா கூறினார். அவர் விளையாட்டாக கூறினாரோ இல்லை உண்மையிலேயே கூறினாரோ தெரியவில்லை. ஆனால், அதை ஆரவ் ஏற்கவில்லை.

Advertising
Advertising

அவருடன் நட்பாகவே பழகி வந்தார் ஆரவ். மற்ற யாரும் ஓவியாவிடம் அதிகம் பேசாமல் இருந்த போது, அவருக்கு ஆறுதலாக இருந்தார் ஆரவ். இதனால் ஓவியாவிற்கு அவர் மேல் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆரவ், அவரை தவிர்க்கும் வகையிலேயே நடந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று ஆரவ் தமிழ் சினிமாவில் இளம் நடிகையான ராஹீ என்பவரை திருமணம் செய்துள்ளார். ராஹீ கௌதம் மேனன் இயக்கிய “ஜோஷ்வா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ஆர்த்தி, சினேகன், காயத்ரி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா வருணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts