பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! தாமரை மலர்ந்தே தீருமாம்!

by adminram |

2366fff81201e5ad0570eb941218d068

கர்நாடக இசைக் கலைஞரான மோகன் வைத்யா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் மோகன் வைத்யா. அங்கு சென்று சக போட்டியாளர்களிடம் எல்லாம் தனது சோகக் கதையை பேசி அழுகாட்சி படம் பிக்பாஸ் வீட்டை மாற்றிய அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் ரசிகர்களும் அவரை மறந்தே விட்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக அலுவலகத்தில் கர்நாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் மூலமாக பிரபலமானவருமான மோகன் வைத்யா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும்; தாமரை மலர்ந்தே தீரும்’ எனக் கூறினார்.

Next Story