கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதில், நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ஷிவானி நாராயணன், அறந்தாங்கி நிஷா, சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா, ரியோ ராஜ், அனிதா சம்பத், நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, நடிகை ரேகா, நடிகை கேப்ரில்லா, நடிகர் சுரேஷ், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை சம்யுக்தா கார்த்திக், மாடலிங் துறையை சேர்ந்த பாலா மற்றும் சோம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இதில் சுரேஷை பற்றி பலருக்கும் தெரியாது. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் சொக்கு எனும் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்நிலையில், இவரை பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ சுரேஷ் எனக்கு நல்ல நண்பர். நல்ல மனிதர். அருமையாக சமைப்பார். தினமும் அவருக்கு கால் செய்து சமையல் குறித்த சந்தேகங்களை அவரிடம் கேட்பேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என பேசியுள்ளார்.