நாடு முழுக்க இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் ஒன்று கூடி ஆயுத பூஜையை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர். சாமி , கொலு பொம்மை, சர்க்கரை பொங்கல் , ஸ்வீட் , புத்தாடை என பிக்பாஸ் வீடே கலைக்கட்டியுள்ளது.
அதில் நகர வாசிகள் , கிராம வாசிகள் என இரண்டு பிரிவினராக பிரிந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிக்பாஸ் சரித்திரத்தில் முதன்முறையாக பிக்பாஸ் சீசன் 4ல் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது தொடர்ந்து 4 மணி நேரம் இடைவிடாத கொண்டாட்டமாக இருக்கிறது. அத்துடன் போட்டியாளர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கப்படுகிறது. ஆக மொத்தம் இன்று பிக்பாஸ் வீடே வானத்தை போல விஜயகாந்த் படம் போன்று ஒரே குடும்ப கொண்டாட்டமாக இருக்கிறது.