உன்கிட்ட இருந்து நான் கத்துக்கணும் - கமலுக்கே குல்லா போட்ட சனம் ஷெட்டி!!

by adminram |

f3863fc070a3d3f657cfeea8dcd95cf3
பிக்பாஸ் வீட்டில் இன்று பெரிசா சம்பவம் எதுவும் நடக்காது என்பது இன்று வெளியான மூன்று ப்ரோமோவிலே தெரிந்துவிட்டது. கமல் ஹாசனும் போட்டியாளர்களின் தவறுகளை தட்டிக்கேட்டு கடிந்துக்கொள்ளவில்லை. இன்று முழுக்க செம கூலாக எல்லோரையும் சிரித்துக்கொண்டே அடக்கிவைத்தார்.

இந்நிலையில் தற்போது உணவை குப்பை தொட்டியில் கொட்டிய சனம் ஷெட்டியை கேள்வி கேட்ட ஆரி குறித்து பேச்சை எடுத்த கமல் அவரை பாராட்டினார். பின்னர் அதுகுறித்து சனம் ஷெட்டியிடம் கேட்க.. அவர் அப்போதும் நான் தான் கொட்டினேன் என்பதை ஒத்துக்கொள்ளாமல் நானா கூட இருக்கலாம் என கூறி எஸ்கேப் ஆனார்.

உடனே கமல், இது போன்று பதில் அளிப்பதை உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் என சிரித்துக்கொண்ட கூறி செம பல்ப் கொடுத்துவிட்டார். இன்னைக்கு ஆண்டவர் நல்ல மூடில் இருக்கிறார். யாரையும் திட்டாமல் கோப்படாமல் அட்வைஸ் செய்து பஞ்சாயத்தை தீர்த்து வைத்துள்ளார். ஆனால், நமக்கு அதுவா முக்கியம்...? இப்படி ஷோ பண்ணினால் எப்படி ஸ்வாரஸ்யமா இருக்கும்?

Next Story