கமலிடமே வீராப்பு பேசிய ரியோ... பிக்பாஸுக்கு வந்து பேரை கெடுத்துக்கிட்டியேடா அம்பி!

12345fcacf6230815e3dbad3331cc47d
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த நிறைய பேர் பெரும் பிரபலமாகி மக்கள் மனதில் தங்களை பற்றிய ஒரு நல்ல அபாபிராயத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர். அதில் ஓவியா குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், இதே நிகழ்ச்சியில் வெளியில் இருக்கும் போது ஒரு நல்ல பெயரை சம்பாதித்திருந்த பல போட்டியாளர்கள் தங்கள் உண்மை முகத்தை காட்டி தங்கள் வாழ்க்கையே கெடுத்துக்கொண்டுள்ளனர். அதில் முக்கியமானவர் ஜூலி.

அந்தவகையில் தற்ப்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் இளம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த ரியோ பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்தே தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற மிதப்பில் சுற்றித்திரிந்து ஓவர் கான்பிடென்ட் ஆக இருந்து வருகிறார்.

அத்துடன் அவரது உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு பொய்யாக இருந்து வருவதாக பரவலான கருத்து மக்கள் மனதில் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கமல் வீட்டில் இருக்கும் யார் முகமூடியை அணிந்துக்கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விக்கு சுமார் 5க்கும் மேற்பட்டோர் ரியோ முகமூடி அணிந்திருப்பதாக கூறி மாஸ் மாட்டிவிடுகின்றனர். ஆனால், எனக்கு கொடுத்தது நியாயமே இல்லை என கமலிடமே அடிவாடி செய்து மாஸ்க்கை வீசி எறிகிறார் ரியோ. இன்னைக்கு இருக்கு தரமான சம்பவம்..

Related Articles
Next Story
Share it