கையில கூட வச்சிக்கிட்டு மார்க்கெட் போன பொண்ணு!.. வசதி வந்தும் நிலைமை மாறலையே ஜூலி!..

0
125

ஜல்லிக்கட்டுக்காக மெரினா புரட்சி செய்த வீரத் தமிழச்சி ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபிறகு 5 நிமிஷம் ஜூலியென அசிங்கப்பட்டார். கம்பேக் இந்தியன் என அழைத்த ரசிகர்கள் படம் சரியாக இல்லை என்றதும் கோ பேக் இந்தியன் என கழுவி ஊற்றியதை போலவே ஜூலியின் நிலைமையும் மாறியது.

ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி பலருக்கு உதவி செய்து வருவது மற்றும் விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டேன் எனக் கூறியதும் அவருக்கு ரசிகர்கள் மீண்டும் ஆதரவை தெரிவித்தனர்.

சோஷியல் மீடியா போரளிகள் டிரெண்டுக்கு ஏற்றது போல கண்மூடித்தனமாக ஓடக் கூடியவர்கள் என்பதை ஜூலியும் நிரூபித்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த ஜூலி, திடீரென ஆளே காணாமல் போன நிலையில், சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பதிவுகளை ஜூலி போட்டு வந்தாலும் இன்னமும் அவருக்கு 2 லட்சம் ரசிகர்கள் தான் உள்ளனர். பல நாள் கழித்து திடீரென போட்டோஷூட் நடத்திய ஜூலி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்டைலிஷான உடையை அணிந்துக் கொண்டு ஹேண்ட்பேக்கை கையில் வைத்துக் கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ள ஜூலியை பார்த்த நெட்டிசன்கள் சிலர், வசதி வந்த பின்பும் கையில் கூடையை தூக்கிக் கொண்டு மார்க்கெட் போய் மீன் வாங்கும் பழக்கத்தை ஜூலி விடலையே குட் கேர்ள் என கலாய்த்து வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில் நடிகை ஜூலி தனது பிறந்தநாளையும் கொண்டாடியிருந்தார். அதன் வீடியோக்களை கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளார்.

google news