விஜய்யை பேட்டி எடுத்த பிக்பாஸ் ஷெரின் - அரிய வீடியோ இதோ!
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின்.
இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தின் போது விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஷெரின் விஜய்யிடம் , பிட்னஸ் ரகசியம், சினிமா துறை குறித்த சில கேள்விகளை கேட்கும் இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.